அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு..!

share on:
Classic

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி - பட்டுக்கோட்டை சாலையில் அரசு மருத்துவமனை அருகே கடந்த 1998-ஆம் ஆண்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை திறந்து வைத்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக துணியால் மூடப்பட்ட பெரியார் சிலையை, திறந்து வைக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனைத்தொடர்ந்து, கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் மூடப்பட்டிருந்த பெரியார் சிலை திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை பெரியார் சிலையின் தலைபாகம் அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அங்கு வசிப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan