பிரான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 'பரியேறும் பெருமாள்'..!!

share on:
Classic

ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டையும் பெற்ற இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் குவித்து வருகிறது. கதிர், ஆனந்தியின் நடிப்பில் வெளிவந்த இந்த பரியேறும் பெருமாள் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் இந்த பரியேறும் பெருமாள் படம் இப்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டுள்ளது. படம் வெளியாகி பல மாதங்கள் ஆனா பிறகும்  இந்த விழாவில் திரையிடப்பட்டுள்ளதால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan