கல்லறையில் அடக்கம் செய்யபட்ட நபர் திடீரென எலுந்ததால் பரபரப்பு..!!

share on:
Classic

பிரேசில் நாட்டில் இறந்ததாக நினைத்து கல்லறையில் அடக்கம் செய்யபட்ட நபர் திடீரென எலுந்து வந்ததால் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் ஒருவர் இறந்து விட்டதாக கூறி அவருடைய குடும்பத்தினர் அடக்கம் செய்துவிட்டு கிளம்பிவிட்டனர். அதிகாலையில் திடீரென கல்லறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அங்கு வேலை செய்த நபர் அந்த அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த நபர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கல்லறையை உடைத்த போது உள்ளே அடக்கம் செய்யப்பட்ட நபர் வெளியே வந்துள்ளார்.

அதை கண்ட அனைவரும் பதறி அடித்து ஓடினர் பிறகு விசாரணையில் அந்த நபர் இறந்து விட்டதாக நினைத்து அவருடைய குடும்பத்தார் புதைத்து விட்டதாக தெரியவந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அந்த நபர் ஒரு இரவு முழுவதும் உள்ளே இருந்ததால் அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை இணையடதளத்தில் பார்த்த ஒரு நபர், நல்ல வேளை பிரேத பரிசோதனை செய்யாமல் விட்டுவிட்டார்களே என கிண்டல் அடித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan