தொடர்ந்து குறைந்துவரும் பெட்ரோல், டீசல் விலை

share on:
Classic

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகளும் குறைந்துள்ளன.

கிடுகிடுவென உயர்ந்து வாகன ஓட்டிகளை இன்னலுறச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 10 காசுக்கும், டீசல் 80 ரூபாய் 4 காசுக்கும் விற்பனை ஆனது.

அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 73 ரூபாய் 57 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 69 ரூபாய் 19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல்  42 காசுகளும், டீசல் 44 காசுகளும் குறைந்து விற்பனையாகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

youtube