தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை...!

share on:
Classic

பெட்ரோல்-டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து, ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக  இறங்கு முகத்தில் இருக்கிறது.  கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது.

இன்று பெட்ரோல், விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.24க்கும்,  டீசல் விலை 19 காசுகள் குறைந்து ரூ.77.05-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 22 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.86,  டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.99- என்ற அளவில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind