தொடர் சரிவில் பெட்ரோல் விலை...

share on:
Classic

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாய் 56 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் 76 ரூபாய் 43 காசுகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டாலரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப் பட்டு  வந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது  பெட்ரோல், டீசல்  விலையில் சிறிதளவில்  மாற்றம்  ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 17 காசுகள் குறைந்து 80 ரூபாய் 56 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல்  16 காசுகள் குறைந்து 76 ரூபாய் 43 காசுகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind