2 மாதங்களுக்கு பிறகு உயர்ந்த பெட்ரோல் விலை...

share on:
Classic

தொடர் சரிவை கண்டு வந்த பெட்ரோல் விலை, கடந்த 2 மாதங்களுக்கு பிறகு இன்று அதிகரித்திருப்பது வாகன ஓட்டிகளை கலக்கமடையச் செய்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை எட்டும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக குறைந்து கொண்டே வந்தது. தொடர் வீழ்ச்சிக்கு பிறகு பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் அதிகரித்துள்ளது. 

சென்னையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 94 காசுகளாக உள்ளது. டீசல் விலையில் மாற்றமில்லாமல் 68 ரூபாய் 26 காசுகளாக இருக்கிறது. 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகள் இடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

News Counter: 
100
Loading...

aravind