பேட்ட ரிவியூ... முதல் பாதி மாஸ், இரண்டாம் பாதி பக்கா மாஸ்

share on:
Classic

பொங்கல் விருந்தாக ரிலீஸாகியுள்ள 'பேட்ட' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக பூர்த்தி செய்துள்ளது. 

சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் வெறித்தனமான எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கும் படம் தான் பேட்ட. இந்த படம் இப்படி இருக்குமோ? அல்லது அப்படி இருக்குமோ? என பல்வேறு எதிர்பார்ப்புகளோடு திரையரங்குகளுக்கு சென்ற அனைவருக்குமே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. ஏனென்றால், ரஜினியை இதற்கு முன்பு யாரும் பார்த்திடாத புதிய பரிமாணத்தில் செதுக்கி காட்டியுள்ளார் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியிஸம் தெறிக்கும் வகையில் திரைக்கதையும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளன. 

ரஜினியை மாஸ் லுக்குடன் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கார்த்திக் சுப்பாராஜ் வெற்றி பெற்றுள்ளார். குறிப்பாக, ஓப்பனிங் சீனும், இடைவேளை சீனிலும் சூப்பர்ஸ்டாரின் மாஸ் மகுடம் வேறு லெவலில் தூக்கி வைக்கப்பட்டிருக்கும். படத்தின் கதைக்களம் மலைப்பிரதேசத்தை பின்புலமாகக் கொண்டு நகர்வதால் சூப்பர்ஸ்டாருக்கு அளிக்கப்பட்டிருந்த உடைகள் அனைத்துமே ஸ்டைலின் உச்சமாக அமைந்திருந்தது. 

முதல் பாதியில் ரஜினியின் மெர்சலான நடிப்பைக் கண்டு வியந்திருந்த ரசிகர்களுக்கு இரண்டாம் பாதியில் மேலும் மேலும் காத்திருந்தது மாஸ் சர்ப்ரைஸ்கள். படத்தின் தொடக்க காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை ரஜினியிசம் பரவிக் கிடக்கின்றது. சூப்பர்ஸ்டாரின் 2 கதாநாயகிகளும் கலர்ஃபுல் கனாவாக திரையில் வலம் வருகின்றனர். ரஜினியின் மாஸ் ஸ்டைலுக்கு ஈடு இணையாக திரையை ஹோல்டு செய்தனர் திரிஷாவும், சிம்ரனும். 

விஜய் சேதுபதியின் கெத்தான கெட்டப் கலந்த நடிப்பும், அனிருத்தின் பின்னணி இசையும் படத்தின் சுவாரஸ்யத்தை குறையாமல் தாங்கிப் பிடித்தன. ரஜினியிஸத்தில் இந்த இருவரின் பங்களிப்பும் மிகப்பெரிய இடம் வகித்தன. இவர்கள் அத்தனை பேருக்கும் மேலாக ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு சிங்கிள் சிங்கிள் ஃபிரேம்களையும் அழகாக செதுக்கியுள்ளார். தலைவரின் ஸ்டைலும், திருவின் கேமரா ஹாண்ட்லிங்கும் இணைந்து நமக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது. 

ஒரு ரஜினி ரசிகராக திரையரங்கிற்கு செல்வோர்களின் அனைத்து விதமான எதிர்பார்ப்புகளும் ஃபுல் மீல்ஸ் அளவுக்கு பூர்த்தியாகி இருக்கிறது என்பதே பேட்ட படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். 'ரஜினிஃபைடு' என்ற வார்த்தைக்கு இந்த பேட்ட படம் உயிர் கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. திரையரங்கிற்கு சென்று மக்கள் காசு கொடுத்து வாங்கும் டிக்கெட்டுக்கு வொர்த்தான படமாக பேட்ட திகழும் என்பது நீங்களும் படம் பார்த்த பிறகு தான் தெரியும். 

 

News Counter: 
100
Loading...

mayakumar