திரையரங்குகள் கிடைக்காமல் திணறும் ’பேட்ட’

share on:
Classic

தெலுங்கில் 'பேட்ட' வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள அசோக் வல்லபனேனியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.  ஜனவரி 10-ம் தேதி வெளியீட்டுக்கு படம் தயாராகி வருகிறது.

ஆனால், இதே தேதியில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் 'என்.டி.ஆர்' மற்றும்  ராம்சரண் நடிக்கும் 'வினய விதேய ராமா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதால் தெலுங்கில் பேட்ட படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் திணறி வருகிறது. 'பேட்ட' படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள அசோக் வல்லபனேனி விளம்பர நிகழ்ச்சி ஒன்றில், அல்லு அரவிந்த், தில் ராஜு மற்றும் யூவி க்ரியேஷன்ஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசி பெரும் சர்ச்சையை கிளப்பினார். மேலும் இவர்களை மாஃபியா என்றும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்றும் பேசினார். 

மேலும், 2-வது முறையாக தொலைக்காட்சி நேரலையில் மீண்டும் அசோக் வல்லபனேனி மோசமாகப் பேசி சர்ச்சையை உருவாக்கியுள்ளார். இந்த முறை தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் குறித்து தவறாகப் பேசியதோடு, தயாரிப்பாளர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்கிற ரீதியில் பேச, கடுப்பான நிகழ்ச்சி தொகுப்பாளர் அசோக்கை நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றினார்.

முன்னதாக தயாரிப்பாளர் பன்னி வியாஸ், எந்த தயாரிப்பாளரும் சூழ்நிலை புரியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம் என்றார். மேலும் 10-ஆம் தேதி வெளியாகும் படங்களின் தேதிகள் ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் தில்ராஜு நினைவப்படுத்தினார்.

News Counter: 
100
Loading...

youtube