சிறுத்தை சிவா vs கார்த்திக் சுப்புராஜ்

share on:
Classic

அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட, விஸ்வாசம் படம் இன்று திரையரங்குகள் அதிர ரசிகர்கள் ஆரவாரத்துடன் வெளியானது.

எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் அதற்கு முழு பொறுப்பு நடிகர்களை அடுத்து இயக்குனர்களுக்கு தான்.... அதுவும், சினிமா உலகின் மிகப்பெரிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும் போது இயக்குனர்களுக்கு பொறுப்பு அதிகமாகிறது. அந்த வகையில் இன்று சினிமா உலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித் நடித்து ஒரே நாளில் வெளியான பேட்ட, விஸ்வாசம் படத்தின் இயக்குனர்களான கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா அவர்களின் பின்னணி என்ன என்பதை காண்போம்.

சிறுத்தை சிவா

தமிழில் வெளியான சிறுத்தை படம் மூலம் தமிழ் திரைத்துறைக்கு இயக்குனராக அறிமுகவானவர். சிறுத்தை பட வெற்றியின் மூலம் இவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இவர் இயக்குனர் மட்டுமில்லை ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர்.

படங்கள் : 

2008-ம் ஆண்டு சவுர்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த சிவா.அடுத்து, 2009-ம் ஆண்டு சங்கம் என்ற தெலுங்கு படத்தையும் இயக்கினார். பின்னர் தமிழ் படங்களின் மீது கவனம் செலுத்திய சிவா 2011-ம் ஆண்டு கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். இதனை தொடர்ந்து, இவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். 2012-ம் ஆண்டு மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை இயக்கிய சிவா. 2014-ம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வீரம் படத்தை இவர் இயக்கினார். 

அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் கேட்பதை விட அதிகமாக கொடுப்பார் என்பதை உண்மையாக்கும் வகையில் அடுத்தடுத்த 3 படங்களை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 2015-ம் ஆண்டு வேதாளம், 2017-ம் ஆண்டு விவேகம் என அடுத்தடுத்து தல அஜித் குமாரை வைத்து படத்தை இயக்கினார். இப்போது 2018-ம் ஆண்டு விஸ்வாசம் படத்தை இயக்கியுள்ளார். இதுரை எட்டுப்படங்களை இயக்கியுள்ள சிவா, தெலுங்கில் மூன்று படங்களையும், தமிழில் ஐந்து படங்களையும் இயக்கியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் : 

நாளைய இயக்குனர் என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பல குறும்பட இயக்குநர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, அவர்களுக்கெல்லாம் ரோல் மாடலானவர் தான் கார்த்திக் சுப்புராஜ். பொறியியல் படித்து ஐ.டி-யில் வேலை பார்த்தவர் தற்போது சினிமா துறையில் வெற்றிகரமான இளம் இயக்குனராக முன்னேறியுள்ளார்.

படங்கள் : 

2012-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படத்தின் மூலம் சினிமா துறையில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் காமெடி ஹாரர் என்னும் புதிய ட்ரெண்டையும் ஏற்படுத்தினார். இந்த படத்தின் மூலம் கார்த்திக் சுப்புராஜ் பல விருதுகளையும் பெற்றார். பின்னர் 2014-ம் ஆண்டு ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். 2015-ம் ஆண்டு குறும்படங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நல்ல குறும்படங்களை தொகுத்து பென்ச் டாக்கீஸ் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார்.

2016-ம் ஆண்டு இறைவி மற்றும் 2018-ம் ஆண்டு மெர்குரி என்ற ஊமை படத்தையும் வெளியிட்டார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

நல்ல படம் : 

திரைப்படத்தின் கதை நன்றாக இருந்தால் அனைவரும் போய் பார்க்க தான் செய்கிறார்கள். அது சிறிய பெரிய என எந்த பட்ஜெட் படமாக இருந்தாலும், நல்ல கதையாக இருந்தாலும், இயக்குனரின் படைப்பும் நடிகரின் நடிப்புமே ஒரு படத்தை பூர்த்தியாக்குகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.
 

News Counter: 
100
Loading...

youtube