ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பிரதமரிடம் கோரிக்கை வைத்த விமானிகள்..!!

share on:
Classic

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு ஒரு மாதம் சம்பளம் வழங்க பிரதமரிடம் விமானிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடியின் காரணமாக, ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத அளவிற்கு பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் நிதி நெருக்கிடியினால் முடங்கி போன ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களுக்கு ஒருமாத ஊதியத்தை வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தேசிய விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கு  சமபளம் வழங்காததால் ஊழியர்கள் போராடி வருகின்றனர். இந்த நிறுவனத்திற்கு சுமார் 8200 கோடி கடன் தொகை நிலுவையில் இருந்தது. இதனால் எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் குழு ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தை நரேஷ் கோபால் தலைமையிலான நிர்வாகத்திடமிருந்து கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan