சென்னை வந்தார் பியூஸ் கோயல்.. பா.ஜ.க கூட்டணியில் யார்?..

share on:
Classic

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் திட்டமிட்டபடி சென்னை வந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, இன்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக, பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல், திட்டமிட்டபடி சென்னை வந்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஓட்டலுக்குச் சென்றுள்ள அவர், அங்கு அதிமுக, தேமுதிக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth