இந்தியாவை குறிவைக்கும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு..?

share on:
Classic

பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, இந்தியாவில் புதிய மாகாணத்தை உருவாக்கி, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. ஷேபியன் மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. உயிரிழந்த  தீவிரவாதிகள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், முதன்முறையாக இந்தியாவில் ஐ.எஸ். அமைப்புக்கான புதிய மாகாணத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  இந்தியாவின் ஒரு பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், அதற்கு "விலயாஹ் ஆஃப் ஹிண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஐ.எஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind