பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டம்..!

share on:
Classic

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும் எனவும், இதற்கான நிதியை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் 'நிர்பயா' நிதி அல்லது மாநில அரசு திட்டத்தின் கீழ் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind