சேலம் : சட்ட விரோதமாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள்..!

share on:
Classic

போடிநாயக்கன்பட்டியில் சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக காவேரி நியூஸின் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியில் சட்ட விரோதமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழில்சாலை இயங்கி வருகிறது. இங்கிருந்து காலை மற்றும் இரவு நேரங்களில் தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை லாரிகள் மூலம் செவ்வாய் பேட்டை சந்தை மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி அனுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், எந்த பெயர் பலகையின்றி பார்பதற்கு வீடு போன்ற தோற்றத்துடன் இந்த ஆலை 15 ஆண்டுகளாக சுதந்திரமாக இயங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டி கப்புகள் மற்றும் பைகளை அங்குள்ள கிடங்குகளில் ரகசியமாக பதுக்கி வைத்து, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆலை சட்ட விரோதமாக இயங்குவது தெரிந்தும், அதிகாரிகள் பெரிதாக கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan