WC19 : வருணபகவான் தென் ஆப்ரிக்க அணியை காப்பாரா?

share on:
Classic

இன்று தென் ஆப்ரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் தடை...

12-வது உலகக்கோப்பையின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா,வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீசசை தேர்ந்தெடுத்துள்ளது காயத்திலிருந்து குணமாகி களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 பந்துகளில் வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையின் காரணாமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டி காக் 17 ரன்னுடனும் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜெயித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.. 

News Counter: 
100
Loading...

Saravanan