+2 தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்..!

share on:
Classic

திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்று, மதிப்பெண் பட்டியலும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி அன்று வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி 19-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan