தோல்வியை ஒப்புக்கொண்ட பிரதமர் : மோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்...

share on:
Classic

பிரதமர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதாக நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி பேசாதாது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளனர். 

அகிலேஷ் யாதவ் :

இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில் “ பிரதமரின் முதல் செய்தியாளர் சந்திப்பை பார்த்தீர்களா..? மான் கீ பாத் நிகழ்ச்சி வானொலிக்கு பதிலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது போல் இருந்தது. ஊடகத்தினர் தங்கள் கேள்விகளையும் கேட்கவில்லை, ஒழுக்கமான படைவீரர்கள் அமைதியாகவே இருந்தனர்” என்று பதிவிட்டுள்ளார். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். செய்தியாளர்களுக்கு மோடி பதிலளிக்காததை அகிலேஷ் இவ்வாறு கிண்டல் செய்ததுடன், கண், காது, வாய் ஆகியவற்றை மூடியிருக்கும் குரங்குகளின் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

சரத்யாதவ் :

“ பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகும், பிரதமர் ஊடகங்களை எதிர்கொள்ள முடியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்பாகவே பிரதமர் தனது தோல்வியை ஒப்புகொண்டது போல தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இருந்தது. மேலும் இது பாஜக மற்றும் அரசின் இறுதி சந்திப்பு” என்று லோக்தந்தரிக் ஜனதா தள கட்சியின் தலைவர் சரத் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உமர் அப்துல்லா :

 “செய்தியாளர்கள் போல மாற்றுவேடமிட்ட பாஜக தொழிலாளர்களுக்கு அமித்ஷா நன்றி தெரிவிக்க மறுந்து விட்டார்” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அகமது படேல் :

 “ஒருவருக்கு பதிலாக மற்றொருவர் பதிலளிக்கும் செய்தியாளர் சந்திப்பை இதுவரை பார்த்தது இல்லை. இதனை நிரூபிக்க பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை” என்று காங்கிரஸ் தலைவர் அகமது படேல் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அசோக் கெல்லாட் : 

“ செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியின் உடல்மொழியை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துவிட்டது. தனது தோல்வியை ஒப்புக்கொண்ட மோடி அதனை நிரூபிக்கும் வகையிலேயே நடந்து கொண்டதை உலகம் புரிந்துகொண்டது. அவர் எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை, யாரும் அவரிடம் கேள்வி கேட்கவும் இல்லை” என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெல்லாட் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Ramya