நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!!!

share on:
Classic

திருப்பூரில் நாளை நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டங்கள் தொடக்க விழா மற்றும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் நாளை அரசு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி, திருப்பூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். மேலும், காணொலி காட்சி மூலம் சென்னை சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை இடையிலான விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையையும் மோடி நாளை துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவைத் தொடர்ந்து, பாஜக தேர்தல் பிரசார கூட்டத்திலும் பங்கேற்று மோடி உரையாற்றுகிறார். அவரது வருகையை முன்னிட்டு, விழா மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 70 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் அரசு விழாக்கான மேடை மற்றும் பொதுக்கூட்ட மேடை, ஹெலிபேட் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மோடி வருகையினை ஒட்டி 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind