ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல்..!

share on:
Classic

ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியின் சட்டங்களால், காஷ்மீரில் ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே பயனடைந்ததாக சாடினார். ஆளுநர் ஆட்சியின் கீழ் காஷ்மீரில் சிறப்பான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், காஷ்மீர் மக்களின் உரிமை நிலைநாட்டப்படும் என கூறினார். ஜம்மு - காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். காஷ்மீரில் ஐஐடி, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் எனவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். காஷ்மீர் மற்றும் லடாக் உலகின் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் எனவும், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா படப்பிடிப்புகளை இனி காஷ்மீரில் நடத்தலாம் என்றும் கூறினார். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை பிரதமர் மோடி தெரிவித்துக் கொண்டார்.

News Counter: 
100
Loading...

Ragavan