மோடி ஒரு தோற்றுப்போன பிரதமர் - ராகுல் காந்தி

share on:
Classic

நரேந்திர மோடி ஒரு தோற்றுப்போன பிரதமர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “ நரேந்திர மோடி அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடியை இலவச பரிசாக வழங்கியுள்ளார். 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளில் தான் வேலைவாய்ப்புக்கள் மிகக்குறைவாக இருந்தன. மோடி ஒரு தோற்றுப்போன பிரதமர். அவர் தற்போது தேர்தலிலும் தோற்றுக் கொண்டிருக்கிறார். வேலைவாய்ப்பின்மை, ஊழல், விவசாயிகள் பிரச்சனை, ரஃபேல் ஊழல் ஆகியவை தான் இந்த தேர்தலின் முக்கிய பிரச்சனையாக உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரியை எளிதாக்குவோம். 22 லட்ச வேலைவாய்ப்புக்களை வழங்குவோம்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ramya