ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் மோடி...

share on:
Classic

பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடு தழுவிய ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.

தேசிய விளையாட்டு தனத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஃபிட் இந்தியா இயக்கத்தை, இன்று காலை 10 மணிக்கு புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி அரங்கத்தில் தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்வில் மக்களிடையே அன்றாட வாழ்க்கையில் உடல் செயல்பாடு குறித்தும், இளைஞர்களிம் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் பிரதமர் உரையாற்றவுள்ளார். நாட்டில் ஒவ்வொருவரும் உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்றி, தங்கள் உடல் திறனை வளர்த்து கொண்டு, உடல் மற்றும் மன உறுதியுடன் இருக்க வேண்டி, இந்த திட்டம் துவங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan