அம்பேத்கரின் 128-வது பிறந்தநாள் விழா..! பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை...

share on:
Classic

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி, டெல்லியில் அவரது திருவுருவப்படத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

நாட்டில் தீண்டாமை ஒழிய அரும்பாடுபட்டவரும், இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை உருவாக்கியவருமான சட்டமேதை அம்பேத்கரின், 128-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

News Counter: 
100
Loading...

Ragavan