ஒரே தேசம், ஒரே தேர்தல் : ஆலோசனைக் குழு அமைக்க முடிவு

share on:
Classic

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆலோசனைக் குழு அமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். 

ஒரே தேசம் ஒரே தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இதில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள கட்சிகளின் பெரும்பாலான தலைவர்கள் பங்கேற்றனர். 

இந்த கொள்கைக்கு பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஒரே தேசம் ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் குழு அமைப்பதற்கு பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதாக கூறினார். அதில் 21 கட்சிகள் கலந்து கொண்டதாகவும், மேலும் 3 கட்சிகள் தங்களது ஆலோசனைகளை கடிதம் மூலம் தெரிவித்ததாகவும் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind