இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்து

share on:
Classic

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்ததையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய அணி வென்று சரித்திர சாதனை படைத்தது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் மகுடம் சூடியுள்ள இந்திய அணிக்கு, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தமைக்கு வாழ்த்துக்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.  

Congratulations to @imVkohli and his team for reaching one of Indian cricket’s final frontiers and winning a test series in Australia for the first time. Gritty batting, marvellous fast bowling and a fine team effort has done us proud. Let’s make a habit of it! #PresidentKovind

— President of India (@rashtrapatibhvn) January 7, 2019

இதேபோன்று, பிரதமர் மோடியும் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள் என்றும், ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி தொடருவதற்கு வாழ்த்துவாகவும் தெரிவித்துள்ளார்.

Has been a wonderful series where the younger and senior players shared responsibilities to achieve something special. @Rishabpant777, who has gone from strength to strength and @imkuldeep18 are definitely ones to watch out for. #INDvAUS pic.twitter.com/enLE3kxHDV

— Sachin Tendulkar (@sachin_rt) January 7, 2019

இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ். லட்சுமணன், ஷேவாக், கவுதம் கம்பீர் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களான மைக்கெல் வாகன், மெக்ராத் உள்ளிட்டோரும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியை வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், மிகவும் உணர்ச்சிகரமான தருணம் இது, ஒரு அணி மட்டுமின்றி, ஒரு குடும்பமாகவும் இருந்து மென்மேலும் ஏற்றம் காண்போன் என பதிவிட்டுள்ளார்

News Counter: 
100
Loading...

aravind