ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிஷ்கேக் சென்றடைந்தார் மோடி...

share on:
Classic

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிஷ்கேக் நகருக்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்றடைந்தார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் இன்று, நாளை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானம் மூலம் பிஷ்கேக் நகருக்கு சென்றடைந்தார். அதுமட்டுமின்றி மாநாட்டின் இடையே அவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருந்ததாக கூறப்பட்டு வந்த நேரத்தில், அதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan