நாதுராம் கோட்சே குறித்த தனது நிலைப்பாட்டை மோடி தெளிவுப்படுத்த வேண்டும் : பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

share on:
Classic

நாதுராம் கோட்சே குறித்த மோடியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்கவேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி “ நாட்டின் தேசத்தந்தையை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக வேட்பாளர் தெரிவித்துள்ளார். அவர்களை பிரதமர் மன்னிக்க கூடாது. அந்த கருத்து கூறியவர் மீது அவர் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாட்டின் பிரதமராகவும், அரசியல் தலைவராகவும் கோட்சே குறித்த நிலைப்பாட்டை நீங்கள் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதனை நீங்கள் தெளிவுபடுத்தப்படுத்த வேண்டும். அவரின் நிலைப்பாடு குறித்து எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் பெயர் நாதுராம் கோட்சே எனவும் தெரிவித்தார். அவரின் இந்த கருத்து பாஜக உள்ளிட்ட அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு கண்டனங்கள் வலுத்த நிலையில், பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் இது குறித்து பேசிய போது, கோட்சே எப்போதுமே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார். அதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Ramya