பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 3,044 கோடி செலவு செய்துள்ளார் - மாயாவதி

share on:
Classic

பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 3044 கோடி செலவு செய்துள்ளதாக மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி “பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு விழாக்களில் தற்போது பிசியாக உள்ளார். அவர் விளம்பரத்திற்காக மட்டும் ரூ. 3044 கோடி செலவு செய்துள்ளார். மக்களின் இந்த பணத்தை உத்திரப்பிரதேசம் போன்ற பின் தங்கிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தலாம். ஆனால் மக்கள் நலனை விட பாஜகவிற்கு விளம்பரம் தான் அதிக முக்கியம். மோடி தனது அரசின் தவறுகளை மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சித்து வருகிறார். மக்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அங்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து வரும் மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளன. அங்கு ஏப்ரல் 11, ஏப்ரல் 18, ஏப்ரல் 23, ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 என 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் அமைய உள்ள அரசை தேர்ந்தெடுப்பதில் உத்திரப்பிரதேச மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya