மே 24-ம் தேதி வெளியாகிறது பிஎம். நரேந்திர மோடி திரைப்படம்..!!

share on:
Classic

பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். 

இதுகுறித்து பேசிய படத்தயாரிப்பாளர் சந்தீப் சிங் பேசிய போது “ பொறுப்புள்ள குடிமகனாக, நாம் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். படம் குறித்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படத்தை மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதிக்கு அடுத்த நாள் வெளியிட முடிவு செய்துள்ளோம். எனவே படம் மே 24ம் தேதி வெளியாகும். படம் வெளியாவதில் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் இருக்காது என நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரான பிஎம் நரேந்திர மோடி படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். மேலும் போமன் இரானி, மனோஜ் ஜோஷி, பிரசாந்த் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னாதாக, இப்படம் ஏப்ரல் 11-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தலை பாதிக்கும் என்பதால் இப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 

News Counter: 
100
Loading...

Ramya