விசிக கொடியுடன் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்..!

share on:
Classic

வந்தவாசி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியுடன் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வாக்கு சேகரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆரணி மக்களை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார். அவர் வந்தவாசி பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சென்னாவரம் கிராமத்துக்கு சென்றபோது காங்கிரசின் கூட்டணி கட்சி கொடியான வி.சி.க கொடியுடன் கிராமத்துக்குள் நுழைய பா.ம.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவானது.

இருதரப்பினரும் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால், காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind