பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

share on:
Classic

பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னாட்சி பெற்ற தமிழகம் படைப்போம் என்பதை முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்து மக்களவைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் அக்கட்சியின் மக்களவைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினார். அப்போது, அவர் தன்னாட்சி பெற்ற தமிழகம் படைப்போம் என்று கூறினார். மாநிலங்களின் உரிமையே மத்திய அரசின் பெருமை என்பதை இந்த தேர்தலின் பிரச்சார வடிவம் என்று ராமதாஸ் தெரிவித்தார். மதுவிலக்கு எங்களின் அசைக்க முடியாத கொள்கை அதனால், மதுவிலக்கு நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிப்படுத்த மத்திய அரசு மாணியம் வழங்க வலியுறுத்துவோம். அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ராமதாஸ் உறுதி கூறினார். மேலும், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan