மடிவளர்த்த இயக்கத்தை மாஃபியாக்கள் ஒருபோதும் வழி நடத்த இயலாது..!!

share on:
Classic

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணையுமாறு நமது அம்மா நாளிதழில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா இதழில், தம்பிகளே வாரீர் தாய் வீடு அழைக்கிறது என்ற தலைப்பில் கவிதை வெளியாகியுள்ளது. இதில் அமமுக கட்சியினரை குறிப்பிடும் விதமாக, ஜெயலலிதா ஒதுக்கிவைத்த அபாயகரமான குடும்பத்தை விட்டு தர்மத்தின் வழிநடக்கும் தாய் கழகத்தில் இணையுமாறு கூறப்பட்டுள்ளது. மடிவளர்த்த இயக்கத்தை மாஃபியாக்கள் ஒருபோதும் வழி நடத்த இயலாது என்றும், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையுமாறு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இணைக் கரத்தால் அழைப்பதாகவும் நமது அம்மா நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth