செல்போன்,பைக் திருட்டை கண்டுபிடிக்க வந்தாச்சு "டிஜிகாப்" செயலி!!!

Classic

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் "டிஜிகாப்" என்ற புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. 

செல்போன் திருட்டை கண்டுபிடிக்கும் வகையில், டிஜிகாப் என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கிவைத்தார். அதனை தொடர்ந்து சி.சி.டி.வி கேமரா அமைப்பதன் அவசியம் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடு மற்றும் சென்னை பெருநகர காவல் துறையில் உள்ள காவல் நிலையங்களில் புது பொலிவுடன் விளங்கும் காவல் நிலையங்கள் பற்றி தயாரிக்கப்பட்டுள்ள  குறுந்தகடும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

News Counter: 
100
Loading...

aravind