"லேப் டாப்" கோரி போராடிய முன்னாள் மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி..!

share on:
Classic

ஈரோட்டில் விலையில்லா மடிக்கணினி வழங்காததால், சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாணவ-மாணவிகளை போலீசார் தடியடி நடத்தி குண்டுகட்டாக கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் விலையில்லா லேப் டாப் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் மாணவர்-மாணவிகளுக்கு லேப்-டாப்களை வழங்கினர். அப்போது, கடந்த 2017-18 கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகள், தங்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை என கூறி, எம்.எல்.ஏ-க்களை முற்றுகையிட்டனர். 

பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டனர். 2 மாதத்திற்குள் லேப்டாப் வழங்கப்படும் என உறுதி அளித்தும் மாணவ-மாணவிகள் கலைந்து செல்லாததால், தடியடி நடித்தி அனைவரையும் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், மதுரை அருகே பரவை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜூ விலையில்லா லேப் டாப்களை வழங்கியபோது, முன்னாள் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் சமரசம் செய்து, போராட்டத்தை கைவிடச் செய்தனர்.

 

News Counter: 
100
Loading...

aravind