இலங்கையில் மேலும் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு..?

share on:
Classic

கொழும்புவில் உள்ள  திரையரங்கத்திற்கு வெளியே இருந்த இருசக்கர வாகனத்தில் மேலும் ஒரு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஈஸ்டர் அன்று இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் சுமார் 350-க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 60-க்கும் மேற்பட்டோரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் வெல்லவெட்டா பகுதியில் உள்ள சவாய் திரையரங்கில் நேற்று இரவு முதல் ஒரு இருசக்கர வாகனத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கேட்பாரற்று இருந்த அந்த பைக்கில் இருந்து சிறிய வெடிச்சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து பைக்கின் சீட் அடியில் இருந்த வெடிகுண்டை திறக்க முடியாததால் வெடிகுண்டு நிபுணர்கள் அதனை வெடிக்க செய்ததாக தகவல் வெளியானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு வெடிகுண்டுடன் வாகனம் நுழைந்திருப்பதாக பிரதமர் ரனில் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் இரு சக்கர வாகனத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

இதேபோல் கட்டனா பகுதியில் திம்பிரிகஸ்கோதுவா என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் ஒரு சந்தேகத்திற்கமான பையில் இருந்து வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. அதனை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

News Counter: 
100
Loading...

Ramya