வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

share on:
Classic

நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நிறைவு பெற்ற நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 856 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒரு மக்களவைத் தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளும் ஒன்று சேர்த்து எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

முறைகேடுகளை தடுக்க வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு  வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதால் அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு உரிய இடத்தில் அமர வைக்கப்பட உள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind