வேலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் பறிமுதல்

share on:
Classic

அரக்கோணம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த  குட்கா, பான்மாசலா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் கடம்பநல்லூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தனியாக இருந்த வீட்டிலிருந்து சிலர் ரகசியமாக மூட்டைகளை காரில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அங்கிருந்த 25 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

aravind