ஜே.கே.ரித்தீஷின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி..!

share on:
Classic

ராமநாதபுரத்தில் மறைந்த திரைப்பட நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கானல் நீர் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான ஜே.கே.ரித்தீஷ், சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான எல்கேஜி படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக எம்.பியாக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். வரும் மக்களவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்த ஜே.கே.ரித்தீஷ், ராமநாதபுரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு, அரசியல் கட்சியனரையும், தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜே.கே.ரித்தீஷின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராமாநாதபுரத்தில் ஜே.கே.ரித்தீஷின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரித்தீஷின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan