பொள்ளாச்சி வழக்கு : புதிய அரசாணை வெளியிட உத்தரவு

share on:
Classic

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி புதிய அரசாணையை வெளியிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

பொள்ளாச்சி வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு நேற்று அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி ஆபாச வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பொள்ளாச்சி ஆபாச வீடியோக்களை வைத்திருப்பதும், பரிமாறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் அடங்கிய அரசாணையை ரத்து செய்து புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan