பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : சபரி ராஜன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு..!

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிக்கிய சபரி ராஜனின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை கையில் எடுத்துள்ள சிபிஐ, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் கடந்த 14-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இன்று எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரிஸ்வந்த் என்ற சபரி ராஜனின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan