பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு...

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி, காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்வதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதில், மாணவியர் பெயர், அவர் பயிலும் கல்லூரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றன. மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்களையும் கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஆகையால், எஸ்.பி. பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புகார் கொடுத்த பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டு, பெண்ணின் ரகசியத்தை தமிழக அரசு காக்கத் தவறிவிட்டதாகக் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, ரூ. 25 லட்சம் இடைக்கால இழப்பீடாக வழங்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், கோவை எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan