பொள்ளாச்சி சம்பவம் : பாதிக்கப்பட்டவர்கள், தகவல் அறிந்தவர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கலாம்...

share on:
Classic

பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதுகுறித்த தகவல் அறிந்தவர்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதெடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த வழக்கு கோவை மாவட்டக் காவல்துறையில் இருந்து குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறைக்கு புலன் விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விபரங்கள் அல்லது குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கூறினால், அவரது பெயர் மற்றும் விபரங்கள் வெளியில் வராமல் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விபரங்களை தொலைபேசி மூலம் 94884 42993 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும், கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலமும் தகவல்களை அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி, வழக்கு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan