கார் விபத்தில் மாணவி உயிரிழந்த வழக்கு..பொள்ளாச்சி ஜெயராமன் மகன் ஆஜராகவில்லை..!

share on:
Classic

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனின் கார் விபத்துக்குள்ளாகி மாணவி உயிரிழந்த வழக்கு மீதான நீதிமன்ற விசாராணைக்கு அவர் ஆஜராகாததால் வழக்கு ஒருமாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் 2016ம் ஆண்டு 3 தோழிகளுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் வீர சுரேகா என்ற மாணவி உயிரிழந்தார். இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரவீன் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கு ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பிரவீன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இந்த நிலையில், கார் விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுவதாக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விபத்துக்குள்ளான கார் குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை பகிர்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev