திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு.. பண்ணை வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தினர்.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தான் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சின்னப்பன் பாளையத்தில்  உள்ள திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டில் ஐஜி ஸ்ரீதர் மற்றும் எஸ்பி நிஷா ஆகியோர் தலைமையில் 6 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தினர். சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் குற்றவாளி திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth