பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கு சிபிஐக்கு மாற்றம்..!

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

பொள்ளாச்சியில் முகநூல் மூலம் நண்பர்களாக பழகி, இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதற்கு அப்பகுதி மக்களும், அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இதையடுத்து ஐ.ஜி.ஸ்ரீதர், காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேற்று விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

vinoth