பொள்ளாச்சி பாலியல் விவகாரம் : 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

share on:
Classic

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேர் மீது கோவை நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக 2 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தும், 2 தனிக்குழுக்களை அமைத்தும் சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக சிபிஐ கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமாா், மணிவண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து குற்றத்தில் ஈடுபட்டுவிட்டதாக சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan