பொல்லார்டே போச்சா...! சம்பளத்திலிருந்து 25% அபராதம் விதிப்பு

share on:
Classic

விதி மீறிய செயல்பாடு காரணமாக மும்பை இண்டியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பொல்லார்டுக்கு 25% சம்பளத்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. மும்பை பேட்டிங்கின் பரபரப்பான இறுதிகட்டத்தின் போது கிரன்  பொல்லார்டு பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது, சென்னை வீரர் பிராவோ வீசிய 2 பந்துகள் ’வைடு’ எல்லைக்கோட்டிற்கு அருகே சென்றன. இந்த 2 பந்துகளையும் ’வைடு’ என கள நடுவர் அறிவிக்காததால் பொல்லார்டு அதிருப்தி அடைந்தார். இதையடுத்து, ’வைடு’ எல்லைக்கோட்டைக் கடந்து நின்றவாறு பேட்டிங் செய்ய ஆயத்தமானார் பொல்லார்டு. இதனால் ஆட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரும் பொல்லார்டை எச்சரித்ததன் பிறகு அவர் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில், ஐபிஎல் ஒழுங்கு விதிகளில் உள்ள லெவல் 1-ஐ பொல்லார்டு மீறியதால் போட்டி சம்பளத்திலிருந்து அவருக்கு 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ’லெவல் 1’ அடிப்படையில் எடுத்துக்கொண்டால், கள நடுவரின் எந்தவொரு முடிவையும் வீரர்கள் மறுப்பின்று ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

mayakumar