அன்னை வேளாங்கண்ணி கல்விக்குழுமத்தில் பொங்கல் கொண்டாட்டம்...

share on:
Classic

சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனத்தில் கோலாகளமாக பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் உரியடி, ரங்கராட்டினம், மாட்டுவண்டி, மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம் சிலம்பம் என பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தன. திருவிழா பாணியில் செய்யப்பட்டிருந்த அலங்காரங்களால், கல்வி நிலைய வளாகத்தில் நுழைந்த உடன் கிராமத்தில் நுழைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒன்று கூடி பொங்கல் வைத்து கொண்டாடினர், 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வேட்டி சேலை அணிந்து வந்திருந்தனர்.

இது மாணவர்களிடையே தமிழ் பரம்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் இருந்தது. பெற்றோர்களுக்கு கோலம் போடும் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருபக்கம் மாணவர்கள் ராட்டினத்தில் சுற்றிக்கொண்டிக்க, மறுபக்கம் மாணவர்கள் மாட்டு வண்டியில் வளாகத்தை சுற்றிக்கொண்டிருந்தனர். இதே போல், ஆட்டம் பாட்டம் என வளாகம் முழுவதும் கொண்டாட்டம் கோலம் கொண்டிருந்தது.

மேலும் அங்கு நடைபெற்ற உணவு திருவிழாவில், தமிழ்நாட்டு பாரம்பரிய உணவான கூழ், கொழுக்கட்டை, திணை போன்றவை இடம் பெற்று இருந்தன. நம் கலாச்சாரத்தை மாணவர்களுக்கு கற்பிக்கவே இது போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் அன்னை வேளாங்கண்ணி கல்வி நிறுவனம் நடத்துவதாக ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். இது போன்ற பண்டிகைகளை திருவிழா போல் அனைவரும் கொண்டாடி தமிழ் கலாச்சாரம் காத்திட வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. 

News Counter: 
100
Loading...

aravind