தொடங்கியது பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்து இயக்கம் 

share on:
Classic

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஆண்டு தோறும் போக்குவரத்து துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2275 பேருந்துகளுடன், இன்று முதல் 14ம் தேதி வரை 5163 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

சொந்த ஊர் செல்வதற்காக அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1,25,000 பேர் முன்புதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு சென்னையில் மண்டல வாரியாக பேருந்து நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind