‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜிடம் பேச்சு..!!

share on:
Classic

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பல அழுத்தமான கதைக்களத்தையும், வண்ணமயமான திரைக்கதையும் ரசிகர்களுக்கு பல புது அனுபவங்களை திரைப்படமாக அளித்தவர் தான் இயக்குநர் மணிரத்னம். இவர் இப்பொழுது கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்' நாவலைப் படமாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்களான நடிகர், நடிகைகள் இதில் நடிக்க இருக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் இரண்டு பாகங்களாக படமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும், பூங்குழலியாக நயன்தாராவும், சுந்தரசோழனாக அமிதாப்பச்சனும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும், குந்தவையாக கீர்த்தி சுரேஷ்-ம் நடிக்க இருக்கின்றனர். பழுவேட்டரையர் கேரக்டரில் மோகன்பாபு நடிப்பதாக இருந்தது, ஆனால் இந்த கேரக்டரில் இப்போது சத்யராஜ் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மூன்று மொழிகளில் உருவாக இருக்கும்  இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan